in

சீர்காழியில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் மீது பரபரப்பு புகார்

சீர்காழியில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் மீது பரபரப்பு புகார்

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் தன்னிடம் பயிற்சி பெறும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதை வீடியோ பதிவு செய்து மிரட்டுவதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா செம்பதனிருப்பு கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் உட்பட வழக்கறிஞர் சங்கமித்திரன் உள்ளிட்ட சிலருடன் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், சீர்காழியில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்திவரும் பாலமுருகன் என்பவர், தன்னிடம் பயிற்சி பெற வரும் குடும்ப பெண்கள், இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதை வீடியோ பதிவு செய்து வைத்துக் கொண்டு, அதை வைத்து பெண்களை மிரட்டி முக்கிய பிரமுகர்களுக்கு கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்து வருவதாகவும் பகீர் குற்றச்சாட்டை புகாராக தெரிவித்துள்ளார்.

பயிற்சி பள்ளி உரிமையாளர் பாலமுருகன் தன்னிடம் பயிற்சி எடுக்க வருகின்ற குடும்ப பெண்கள், இளம் பெண்களிடம் அவர்களது செல்போன் எண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியும்,பயிற்சி கொடுக்கும் போது பாலியல் சீண்டல்களை செய்தும், சில பெண்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லைகள் கொடுத்து வருவதாகவும், பாலமுருகனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார்கள் என்றும் இந்த விவகாரம் குறித்து வெளியில் சொல்ல பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சப்படுவதால் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விசாரித்து உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஶ்ரீகாந்த் அவர்களிடம் புகார் அளித்து மேற்படி பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சீர்காழியில் உள்ள அந்த ஓட்டுநர் பயிற்சி பள்ளி எதிரில் பொதுமக்களும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களும் சேர்ந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக கூறியுள்ளனர்.

What do you think?

 முதல்வர் விஜய் குறித்து திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் சர்ச்சை பேச்சு

தஞ்சாவூர் பெரியகோயில் மஹாவாராஹி அம்மன் வெண்ணெய் அலங்காரம்