in

களிமண் பொம்மை தயாரிப்பில் கட்டிடப் பொறியியல் மாணவர்கள் ஆர்வம்

களிமண் பொம்மை தயாரிப்பில் கட்டிடப் பொறியியல் மாணவர்கள் ஆர்வம்

புதுச்சேரியில் புவிசார் குறியீடு பெற்ற டெரகோட்டா எனப்படும் சுடு களிமண் சிற்பக்கலை பாரம்பரியக் கலையாக உள்ளது. இந்த கலையை பத்மஸ்ரீ விருது பெற்ற முனுசாமி கடந்த 37 ஆண்டுகளாக வில்லியனூர் பகுதியில் பயிற்சி கூடம் அமைத்து பயிற்சி அளித்து வருகிறார். அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் புதுச்சேரி மட்டுமல்லாமல் வெளிமாநில மாணவர்களிடையே இந்த கலையை கற்று தந்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக சென்னை வண்டலூர் தனியார் பொறியியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு பயிலும் கட்டிடட பொறியியல் மாணவர்கள் இரண்டு நாள் கல்வி சுற்றுப்பயணமாக புதுச்சேரி வந்துள்ளனர்.

இவர்கள் வில்லியனூரில் களிமண்ணால் பொம்மைகள் செய்வது குறித்து ஒருநாள் பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.

இவர்களுக்கு பத்மஸ்ரீ விருது பெற்ற கைவினை கலைஞர் முனுசாமி மாணவர்களுக்கு களிமண் பொம்மை செய்வது குறித்து விநாயகர் மயில் வாத்து யானை உள்ளிட்ட பல்வேறு வகையான பொம்மைகள் செய்து காண்பித்து பயிற்சி அளித்தார்.

பின்னர் மாணவர்களும் பயிற்சியில் விலங்குகள், பாரம்பரிய கலைப்பொருட்கள், பறவைகள், சாமி சிலைகள், கடல் வாழ் உயிரினங்கள், என பல்வேறு பொம்மைகளை மாணவர்கள் ஆர்வமுடன் கற்று மகிழ்ந்தனர்.

பயிற்சி குறித்து பத்மஸ்ரீ முனுசாமி கூறுகையில் அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் இந்த கலையை புதுச்சேரி மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் இளைய தலைமுறையினர் இடையே கொண்டு செல்வதாக அவர் கூறினார்

What do you think?

குத்தாலம் ராஜகாளியம்மன் ஆலய 22 ஆம் ஆண்டு திருநடன உற்சவம்