in

வடலூர் ஸ்ரீ பச்சை வாழி அம்மன் ஆலயத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் சாமி தரிசனம்

வடலூர் ஆபத்தானரனபுரம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ பச்சைவாழியம்மன் கோயில் அமைந்துள்ளது.

இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தனது குடும்பத்துடன் கோயிலுக்கு வந்தார். இவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கருவறைக்குள் சென்று சாமிக்கு தீபாராதனை காண்பித்து பூஜை செய்தார். மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்.

What do you think?

பழனி மலைக்கோயில் உண்டியல் எண்ணிக்கை

களிமண் பொம்மை தயாரிப்பில் கட்டிடப் பொறியியல் மாணவர்கள் ஆர்வம்