ஆடி வெள்ளி: தஞ்சை கோடியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்
தஞ்சாவூரில் கரந்தை அருகே கும்பகோணம் சாலையில் எல்லை கோயில் தெய்வமாக மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான ஸ்ரீ கோடியம்மன் ஆலயம் உள்ளது, இங்கு அன்னை ஆதிபராசக்தி பச்சைக்காளி, பவளக்காளி என்ற இரண்டு வடிவங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்,
இந்நிலையில் இன்று ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அதைத் தொடர்ந்து மலர்களால் புஷ்ப அலங்காரம், வளையல் அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்


