in

மதி சுடர் ஆயத்த ஆடை உற்பத்தி அலகு நிலையம்


Watch – YouTube Click

 

மதி சுடர் ஆயத்த ஆடை உற்பத்தி அலகு நிலையம்

 

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் குருக்கத்தியில் உள்ள வட்டார வணிக வள மையத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் குருக்கத்தி, 119அனக்குடி, அகரக்கடம்னூர் ஆகிய ஊராட்சிகளில் தையல் சிறு தொழில் தொகுப்பு மகளிர் தொழில் முனைவோரை கொண்டு மதி சுடர் ஆயத்த ஆடை உற்பத்தி அலகு நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்தொழில் தொகுப்பிற்கு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் தலா ரூ.250000 வீதம் வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பிலிருந்து முதல் கட்டமாக 10 தொழில் முனைவோர்களை தேர்வு செய்து மதி சுடர் ஆயத்த ஆடை உற்பத்தி அலகு மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் திறந்து வைத்தார்.

தொடந்து மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் 20 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.10 இலட்சம் தொழில் கடன் வழங்கினார்.

முன்னதாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் கண்காட்சியினை பார்வையிட்டு கொள்முதல் செய்து ஊக்கப்படுத்தினர்.

இந்நிகழ்சியில் திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) முருகேசன், உதவி திட்ட அலுவலர்கள் காமராஜ், சந்திரசேகர், வட்டாட்சியர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி கீழ்வேளூர் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் குகன் மாவட்ட வலப் பயிற்றுநர் சுகந்தி வட்டார இயக்க மேலாளர் ராஜகோபால் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தங்கமணி, சித்ரா, மகேஸ்வரி, ரவிச்சந்திரன், கிருபா, தேவி, வைகை சமுதாய வள பயிற்றுனர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

200க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

குடிநீர் இணைப்பு வழங்காததை கண்டித்து காத்திருப்பு போராட்டம்