in

வருடாந்திர பிரம்மோற்சவம் சூரிய பிரபை வாகனம்

வருடாந்திர பிரம்மோற்சவம் சூரிய பிரபை வாகனம்

 

ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் ஏழாம் நாள் காலை சூரிய பிரபை வாகன புறப்பாடு.

ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாளான இன்று காலை உற்சவர் மலையப்ப சுவாமியின் சூரிய பிரபை வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

சூரிய பிரபை வாகன புறப்பாட்டை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சாமி கோவிலிலிருந்து தங்க திருவாச்சியில் புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார்.

அங்கு தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமிக்கு தீப தூப நெய்வேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது.

 

தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கிடையே காலை 8 மணிக்கு துவங்கி கோவில் மாட வீதிகளில் மலையப்ப சாமியின் சூரிய பிரபை வாகன புறப்பாடு நடைபெற்றது.

பக்தர்களின் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள்,கோவில் ஜீயர்களின் திவ்ய பிரபந்த கானம், வேத கோஷம், பக்தி முழக்கம், மங்கள வாத்தியம் ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற சூரிய பிரபை வாகன புறப்பாட்டை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.

What do you think?

A Practical Slots Cheat Sheet for Australian Play

மழையை நம்பி நாகை மாவட்ட விவசாயிகள் சம்பா உழவுப் பணியில் தீவிரம்