in

3 ஏக்கரில் பயிரிட்டு அசத்தி வரும் பட்டதாரி பெண்


Watch – YouTube Click

3 ஏக்கரில் பயிரிட்டு அசத்தி வரும் பட்டதாரி பெண்

 

வேதாரண்யம் அருகே 1,520 தொலைந்த பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு 3 ஏக்கரில் பயிரிட்டு அசத்தி வரும் பட்டதாரி பெண்: பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்க விவசாயிகளுக்கு கள பயிற்சி:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த குரவப்புலம் கிராமத்தில் பட்டதாரி பெண் 1,520 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து சாகுபடி செய்துள்ளார். இவரது வயலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரில் பார்வையிட்டு சாகுபடி செய்யும் முறை குறித்து கள பயிற்சி பெற்றனர்.

பொறியியல் பட்டதாரி பெண் சிவரஞ்சனி தொலைந்து போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள தொலைந்த பாரம்பரிய நெல் ரகங்களை தனது கணவர் உதவியுடன் தேடிச்சென்று இதுவரை 1,520 நெல் ராகங்களை கண்டறிந்து தனது வயலில் பயிரிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து பழங்காலம் முதல் இந்தியாவில் சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இருந்ததாகவும், தற்போது அவற்றில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே நெல் ரகங்களை காண முடிகிறது என்றும் தன் வாழ்நாளில் தன்னால் முடிந்த அளவு தொலைந்து போன நெல் ரகங்களை மீட்டு விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உறுதியுடன் அசாம் ஒரிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா, சட்டீஸ்கர், மணிப்பூர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தனது தேடலை விரிவுபடுத்தி இலுப்பைப்பூ சம்பா, கருங்குருவை, மடுமுழுங்கி, நவரா, பால் குடவாழை, வெள்ள குடவாழை, செம்புலி பிரியன், கடற்பாலி உள்ளிட்ட 1,520 தொலைந்த பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு தனது 3 ஏக்கர் வயலில் ஒவ்வொரு நெல் ரகங்களையும் 40 சதுர அடி என்ற அளவில் அவற்றை பயிரிட்டுள்ளார் தற்போது அவைகள் நன்றாக கதிர் விட்டு உள்ளது.

தங்கத்தம்பா, சொர்ணமுகி, சொர்ணமல்லி, வாடன் சம்பா, புழுதிக்கார், செங்கல்பட்டு, சிறுமணி, சொர்ணவாரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்களையும், ஊட்டச்சத்துக்களையும் உடைய நெல் ரகங்களை பயிரிட்டுள்ளார்.

தமிழகத்தில் இது வரை யாரும் பயிரிடாத 1,520 பாராம்பரிய நெல் வகைகளை பயிர் செய்துள்ளார். இவர் சாகுபடி செய்துள்ள வயலில் நம்மாழ்வர் வனகம் குழுவினர் பார்வையிட்டு பயிற்சி அளித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

லிவ் – இன் உறவை பதிவு செய்ய உத்தரவு

டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி கருகும் சம்பா