in

கஞ்சா குற்றவாளி படுகொலை முக்கிய குற்றவாளிகள் 3 பேரை கைது செய்து ஆயுதங்கள் பறிமுதல்


Watch – YouTube Click

கஞ்சா குற்றவாளி படுகொலை முக்கிய குற்றவாளிகள் 3 பேரை கைது செய்து ஆயுதங்கள் பறிமுதல்

 

புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகர் 12-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ருத்ரேஷ் (வயது28). இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. பெயிண்டர் வேலை செய்து வந்த ருத்ரேஷ் சமீப காலமாக கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வர் என்கிற மோகன் ஈஸ்வர் என்பவரும் கஞ்சா விற்று வந்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் கஞ்சா விற்பதில் தொழில் போட்டி இருந்து வந்துள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இது தொடர்பாக இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஈஸ்வரை கத்தியால் ருத்ரேஷ் வெட்டி உள்ளார்.

இதில் ஈஸ்வரருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ருத்ரேஷ் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு ஜெயிலில் ஒரு மாதம் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் தேதி ஜாமினில் வெளிவந்துள்ளார்.

இந்நிலையில் அங்குள்ள கங்கை முத்துமாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்று உள்ளது. இதில் ருத்ரேஷ் தாய் மற்றும் சகோதரி பால் குடம் எடுத்ததால் அங்கு நின்றுள்ளார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் ஈஸ்வர் மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேர் வந்துள்ளனர்.

இதனை கண்டதும் ருத்ரேஷ் அங்கிருந்து தப்ப முயன்றபோது, கும்பல் சுற்றி வளைத்து ருத்ரேசை சரமாரியாக அரிவாளால் தலையில் வெட்டியதில் ருத்ரேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இதனை அடுத்து உருளையன்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டதை அறிந்து, ருத்ரேஷ் (எ) ருத்ரேஷ்மணியை கொலை செய்த ஈஸ்வர் என்ற மோகன் ஈஸ்வர் மற்றும் அவரது நண்பர்களை தேடியபோது, ஈஸ்வர் (எ) மோகன் ஈஸ்வர், கௌதம் மற்றும் சின்ன அரவிந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடமிருந்து குற்ற சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட 3 கத்திகள், 2 மொபைல் போன்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.மற்றவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்…


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரி பிள்ளையார் குப்பத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகி போட்டி

யானைகள் அட்டகாசத்தால் விவசாயிகள் பாதிப்பு. கண்டு கொள்ளாத வனத்துறை