ஹரியானா தேசிய தரவரிசை டென்னிஸ் போட்டி தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயல் வீராங்கனை டானிகா என். ஃபெர்னாண்டோ வெற்றி
கர்னால், செப். 4: ஹரியானா டென்னிஸ் சங்கத்தின் ஆதரவுடன், ஹரியானா மாநிலம் கர்னால் நகரில் உள்ள சாமுண்டா கிராஸ் கோர்ட் டென்னிஸ் அகாடமியில் ‘சாமுண்டா-AITA அகில இந்திய ஓபன் ₹1 லட்சம் பரிசுத்தொகை கொண்ட மகளிர் தேசிய தரவரிசை டென்னிஸ் போட்டி’ நடைபெற்றது.
2026 செப்டம்பர் 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயலைச் சேர்ந்த டானிகா என். ஃபெர்னாண்டோ மகளிர் இரட்டையர் பிரிவில் சிறப்பாக விளையாடி வெற்றியாளர் பட்டத்தை கைப்பற்றினார்.
தேசிய அளவிலான இப்போட்டியில் வெற்றி பெற்ற டானிகா என். ஃபெர்னாண்டோ
மேலும், டானிகா மூத்தோர் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறி, இரண்டு பிரிவுகளில் வெற்றி மேடையில் (podium finishes) இடம்பிடித்து சிறப்பானதொரு சாதனையைப் படைத்துள்ளார்.
இதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


