in

எதிர்பார்த்த மீன்பாடு கிடைத்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி

எதிர்பார்த்த மீன்பாடு கிடைத்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி

 

60 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களுக்கு எதிர்பார்த்த மீன்பாடு கிடைத்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி: இறால் நண்டுகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படாததால் கவலை:

60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வலையில் எதிர்பார்த்த மீன் பாடு கிடைத்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மீனவர்கள் பிடித்து வந்த இறால், நண்டு, மீன்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படாத்தால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

மீன் பிடி தடை காலம் முடிவடைந்ததையடுத்து ராமேஸ்வரம், மண்டபம், தொண்டி, திருவாடாணை உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் இருந்து சுமார் 1500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று அதிகாலை மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இன்று அதிகாலை முதல் கரை திரும்பினர்.. மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தாங்கள் எதிர்பார்த்த இறால், நண்டு, கனவாய் போன்ற விலை உயர்ந்த மீன்கள் அதிகளவு கிடைத்தால் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கரை திரும்பினர்.

டீசல் விலை உயர்வு மற்றும் மீன் பிடி சாதனைங்கள் விலை உயர்வு என கடும் சிரமத்துக்கு மத்தியில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த இறால் மற்றும் நண்டு மீன்களுக்கு தனியார் மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் உரிய விலை நிர்ணயம் செய்யாமல் கொள்முதல் செய்துள்ளதால் 60 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

எனவே,மீன்பிடி தடைகாலங்களில் அதிக குதிரை திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்தும் நாட்டுப்படகைகளுக்கும் மீன்பிடிக்க தடை விதிக்க வேண்டும் மற்றும் மத்திய, மாநில அரசுகள் இறால் மீனுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ன இல்லையெனில் அரசால் விதிக்கப்படும் 60 நாள் மீன்பிடி தடைக்காலத்தை ரத்து செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

கோவை உப்பார வீதி பகுதியில் அருள் ஶ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 39 ஆம் ஆண்டு மகா உற்சவ திருவிழா 

கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்ட ஃபியோனா விழிப்புணர்வு விழா – கோவை