in

பிரதமர் மோடி நாட்டில் உள்ள அனைவரையும் பல்வேறு வகைகளில் மிரட்டி வருகின்றார்


Watch – YouTube Click

பிரதமர் மோடி நாட்டில் உள்ள அனைவரையும் பல்வேறு வகைகளில் மிரட்டி வருகின்றார்

 

மயிலம் – ஆரணி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக தரணி வேந்தன் என்பவர் போட்டியிடுகின்றார்.

இவருக்கு பல்வேறு பகுதிகளில் சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி. மஸ்தான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

இதன் ஒரு பகுதியாக திண்டிவனம் அடுத்த மயிலம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கந்தூரில் திமுக வேட்பாளர் தரணி வேந்தனை ஆதரித்து அமைச்சர் செஞ்சி. மஸ்தான் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்து பேசினார்.

அப்போது அவர்,
தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று பாடுபடுபவர் நமது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். ஆனால் நீட் தேர்வை கொண்டு வந்ததன் மூலமாக ஏழை மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையை உருவாக்கி, மாணவர்கள் படிப்பதற்கு முட்டுக் கட்டை போட்டவர் பாரத பிரதமர் மோடி என்று கூறினார் .

மேலும் அவர் பேசும் போது, சிறிய திருடர்கள் சட்டத்தை பார்த்து அஞ்சுவதும், பெரிய திருடர்களை பார்த்து சட்டமே அஞ்சுவதும் நமது இந்திய நாட்டில் மோடி ஆட்சியில் மட்டும் தான் என்று கூறியவர்.

பிரதமர் மோடி நாட்டில் உள்ள அனைவரையும் பல்வேறு வகைகளில் மிரட்டி வருகின்றார். ஆனால் பிரதமர் மோடி மிரட்டியும் அஞ்சாமல் சிங்கமென கர்ஜித்துக் கொண்டிருப்பவர் நமது தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மட்டும்தான் என்று பெருமிதம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் மாசிலாமணி,
சேதுநாதன், தலைமை தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி.சிவா, ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன், தலைமை கழக பொறுப்பாளர் ஜெரால்டு, மாவட்ட அவை தலைவர் டாக்டர் சேகர், மயிலம் ஒன்றிய செயலாளர் மணிமாறன், மாவட்ட நிர்வாகிகள் கூட்டேரிப்பட்டு .அன்சாரி, நெடி . சுப்ரமணி, சந்திரன்.
செந்தில்குமார்,ஒன்றிய குழு உறுப்பினர்கள் பரிதா சம்சுதீன், ராஜ்பரத், செல்வகுமார், சாந்தகுமார், உமா ஞானசேகர், ஊராட்சி மன்ற தலைவர்கள்
பூங்கா. பாக்யராஜ், குமுதா ரமேஷ், ஒன்றிய நிர்வாகிகள் பிரகாஷ், கண்ணன், சேகர், பிரபு, அன்பு சேகர் உதயவாணன் பாஸ்கர் உள்ளிட்ட திமுக, விசிக கூட்டணி கட்சி நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

யூ டர்ன் அடித்து மீண்டும் மயிலாடுதுறைக்கு திரும்பிய சிறுத்தை

கடும் வெயிலில் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் தமிழ் வேந்தனை ஆதரித்து பிரச்சாரம்