in

ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் நவராத்திரி கொலு பூஜை

ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் நவராத்திரி கொலு பூஜை 

 

குத்தாலத்தில் அமைந்துள்ள அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் நவராத்திரியை முன்னிட்டு இரண்டாம் நாள் கொலுபூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது.

இக்கோயில் குளத்தில் நீராடினால் சரும நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடல் பெற்ற தேவாரத் ஸ்தலமான இக்கோவில் நவராத்திரியை முன்னிட்டு கொலு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

நவராத்திரி விழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி அம்பாளுக்கு காலை மகா அபிஷேகமும் மாலை உற்சவம் அம்பாளுக்கு அன்னபூரணி சிறப்பு அலங்கார ஆராதனையும் நடைபெற்றது.

தொடர்ந்து இவ்விழாவின் இரண்டாம் நாளான இன்று இரவு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கொலுபூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னப்பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

What do you think?

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் சின்ன சேஷ வாகனம்

கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிய வாகன பழுதுபார்ப்போர் சங்கம்