in

குத்தாலத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

குத்தாலத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியை மண்டல துணை வட்டாட்சியர் பாரதி, தேர்தல் துணை வட்டாட்சியர் சசிகலா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பள்ளியை அடைந்தது.

இதில் பங்கேற்ற மாணவர்கள் தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை கையில் ஏந்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் குமார், தேர்தல் உதவியாளர் மனோஜ்குமார், குத்தாலம் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஆசிரிய ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

What do you think?

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு!