உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தல பேராலயத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை.

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாட்டம்.
நாகப்பட்டினம் மாவட்டம் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தல பேராலயத்தில் கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திமுகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் பொதுமக்களுக்கு தென்னை மரக்கன்றுகள் இனிப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, பேரூர் திமுக செயலாளர் மரிய.சார்லஸ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

