in

இந்திய அரசியலமைப்புச் சட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி

இந்திய அரசியலமைப்புச் சட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி

 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளை முன்னிட்டு புதுச்சேரியில் அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்கும் பேரணி காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது.

வாக்குத் திருட்டு, தேர்தல் முறைகேடுகள், அரசியலமைப்பு நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் SIR நடவடிக்கைகள் உள்ளிட்ட விவகாரங்கள் ஜனநாயக மரபுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, அரசியலமைப்பைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி இன்று புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் மற்றும் ஒதியஞ்சாலை காவல் நிலையம் அருகிலிருந்து பேரணி புறப்பட உள்ளது.

தொடர்ந்து, பெருந்தலைவர் காமராஜர் சிலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாகச் சென்று, சம்பா மாதா கோயில் எதிரே உள்ள செயின்ட் ஆன்ஷ் வீதியில் பேரணி நிறைவடைந்தது.

அரசியலமைப்பைக் காப்போம், ஜனநாயகத்தைக் காப்போம் என்ற முழக்கத்துடன் மக்களை உறுப்பினரும் மாநில தலைவருமான வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியநாதன் டி பி ஆர் செல்வம் உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேரணிகள் ஊர்வலமாக சென்றனர்….

What do you think?

ஜோதி பிழம்பாய் காட்சி அளிக்கும் அண்ணாமலையார்

பறவை காய்ச்சல் எதிரொலி குழி  தோண்டி புதைக்கும் பணி