தமிழகத்திற்கு உரிய காவிரி பங்கு நீரை பெற்றுத் தர வலியுறுத்தி கல்லணையில் இறங்கி விவசாயிகள் போராட்டம்.
மேகதாது அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்தும் தமிழகத்திற்கு உரிய காவிரி பங்கு நீரை பெற்றுத் தர வலியுறுத்தி கல்லணையில் இறங்கி விவசாயிகள் போராட்டம்.
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு தர வேண்டிய உரிமை நீரை உடனடியாக மத்திய மாநில அரசுகள் பெற்றுத் தர வேண்டும். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தபடி சிறுகுரு நடுத்தர விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

காவிரி நீர் இன்றி இந்த ஆண்டு குருவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கல்லணையில் கரிகால சோழன் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியாக வந்து கல்லணையில் இறங்கி தமிழக விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்.

பேட்டி சின்னதுரை தமிழக விவசாயிகள் சங்கம்


