in

பிரபல சாலையில் கழிவுநீரால் துர்நாற்றம் வீசும் அவல நிலை

பிரபல சாலையில் கழிவுநீரால் துர்நாற்றம் வீசும் அவல நிலை

 

கோவில் நகரமான காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகமருகே பிரபல சாலையில் கழிவுநீரால் துர்நாற்றம் வீசும் அவல நிலை, மாநகராட்சி மெத்தனம், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் கோரிக்கை……….

கோவில் மாநகரமான காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி புதிய அலுவலகம் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பேருந்து நிலையம் அருகே உள்ள இந்த மாநகராட்சி கட்டிடம் அருகே பிரசித்தி பெற்ற கச்சபேஸ்வரர் ஆலயம், சித்ரா குப்தர் கோவில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம், கார்த்திகேயன் திரையரங்கம் பல்வேறு உணவகம் & முக்கிய வியாபார ஸ்தலங்கள் உள்ளன.

இந்த நிலையில் பேருந்து நிலையத்திலிருந்து கச்சபேஸ்வரர் ஆலயம் செல்லும் அந்த முக்கிய சாலையில் ஒரு வருடத்திற்கு மேலாக கழிவுநீர் வெளியேறி மிகுந்த துர்நாற்றம் வீசுகின்றது.

பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ள நிலையில் தற்காலிகமாக சில முறை கழிவு நீரை தூய்மை செய்யும் நிலையில், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நடந்து செல்வோர் என அனைவரும் மூக்கை மூடிக் கொண்டு செல்லும் அளவில் கடும் துர்நாற்றம் வீசுகின்றது.

மேலும் வரும் 12ஆம் தேதி பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் ஆலயத்தின் தங்கத்தேர் நான்கு ராஜ வீதிகளில் உலாவில் மூன்று அமைச்சர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்வு நடைபெற உள்ளது.

எனவே கோவில் நகரம், பட்டுக்கு பெயர் போன நகரம் என விலங்கும் காஞ்சி மாநகராட்சி அருகே மனிதக் கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசும் அவல நிலை உள்ளது.

மிகவும் மெத்தனமாக செயல்படும் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

சேத்திரபாலபுரத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த காலபைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு தேங்காய், பூசணிக்காய்,பாகற்காய் இவற்றில் தீபமிட்டு பக்தர்கள் வழிபட்டனர்

தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இரட்டைமலை சீனிவாசனார் 167-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்