in

சந்தோஷமாக பிறந்த நாளை கொண்டாடிய என்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிவிட்டீர்களே… நடிகர் ஆதங்கம்


Watch – YouTube Click

சந்தோஷமாக பிறந்த நாளை கொண்டாடிய என்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிவிட்டீர்களே… நடிகர் ஆதங்கம்

சந்தோஷமாக என் பிறந்த நாளை கொண்டாடிய நான் இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன் என்று பிரபல நடிகரும் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் வேலராமமூர்த்தி கூறியுள்ளார்.

சமீபத்தில் கூட வெளியான ‘Captain Miller’ திரைப்படத்தின் கதை நான் எழுதிய நாவலில் இருந்து திருடப்பட்டது என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

தற்போது வலைதளத்தில் தன் பெயரில் அக்கவுண்ட் ஓபன் செய்து பணம் மோசடி நடப்பதாக புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, அன்பு மிக்க நண்பர்களே தோழமை உறவுகளே என் பிறந்தநாளில் வாழ்த்துக்கள் கூறிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி இந்த கொண்டாட்டாதின் மகிழ்ச்சியில் இருந்த என்னை, யாரோ ஒரு மோசடி பேர்வழி என் பெயரில் கணக்கு தொடங்கி பணம் பறிக்கும் கீழ்த்தரமான வேலையில் ஈடுபட்டுள்ளார் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

தயவுசெய்து யாரும் ஏமாற வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த வீடியோவில் நடிகர் வேலராமமூர்த்தி கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

இறந்ததாக போலி வீடியோ வெளியிட்ட நடிகைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் கொடிமரம் மற்றும் சிலைகள் காணவில்லை