in

சபாநாயகர் மகள் ஜனனி தனது தந்தைக்கு பதிலாக தொகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார்


Watch – YouTube Click

சபாநாயகர் தொகுதியில் பாஜக தேர்தல் பரப்புரை; தந்தைக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட சபாநாயகரின் மகள்…! முதலமைச்சர் ரங்கசாமி தேர்தல் பிரச்சாரத்தில், சபாநாயகர் மகள் ஜனனி ஜீப்பில் ஏறி தனது தந்தைக்கு பதிலாக தொகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி கடந்த ஒரு வாரமாக பல கட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு அவரது ஆதரவாளர்கள் மாலைகள் அணிவித்தும், பட்டாசுகள் வெடித்தும் வரவேற்பு வழங்கி வருகிறார்கள்.

ஒவ்வொரு தொகுதிகளுக்கு பிரச்சாரத்துக்கு செல்லும்போது அந்தந்த தொகுதி என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பிரச்சார வாகனத்தில் ஏறி தங்களது தொகுதி மக்களிடம் நமச்சிவாயத்துக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். இதைப்போல் சபாநாயகர் செல்வத்தின் தொகுதியான மணவெளி தொகுதியில் திறந்த ஜீப்பில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் நமச்சிவாயம் வாக்கு சேகரித்தனர். சபாநாயகர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்ற விதி இருப்பதால் அவரது மகள் ஜனனி பிரச்சார வாகனத்தில் ஏறி தனது தந்தைக்கு பதிலாக தொகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

முன்னதாக மணவெளி தொகுதிக்கு வந்த அமைச்சர் நமச்சிவாயத்திற்கு ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்

வட்டி வீதத்தில் மாற்றம் இல்லை ரிசர்வ் வங்கி அறிவிப்பு