in

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சித்திரை திருநாள் சிவலிங்கத்தின் மீது சூரியஒளி படும் அபூர்வ காட்சி


Watch – YouTube Click

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சித்திரை திருநாள் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி…

ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள திருநேர் அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருநாள் அன்று சூரிய பகவான் அண்ணாமலையார் மீது பட்டு வழிபடுவது வழக்கம். இந்த அபூர்வமான நிகழ்வினை ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாரையும் சூரிய பகவானையும் ஒருசேர தரிசிப்பர்.

அதன்படி சித்திரை திருநாள் ஆன இன்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள திருநேர் அண்ணாமலையார் திருக்கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு திருநேர் அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பல்வேறு வண்ண மலர்களை கொண்டு மலர் மாலைகள் தொடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சரியாக 7 மணிக்கு தீப மலையின் உச்சியில் காட்சி கொடுத்த சூரிய பகவான் திருநேர் அண்ணாமலையார் மீது பட்டு, சூரிய பகவான் திருநேர் அண்ணாமலையாரை வழிபட்டார்.

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த அபூர்வ நிகழ்வினை நீண்ட நேரமாக ஆன்மீக பக்தர்கள் காத்திருந்து திருநேர் அண்ணாமலையாரையும், சூரிய பகவானையும் அண்ணாமலைக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு ஒரு சேர சாமி தரிசனம் செய்தனர்.


Watch – YouTube Click

What do you think?

இருவருடைய வாக்குவாதம் நாகை அபிராமி திருவாசலில் பரபரப்பு

அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து நடிகை கௌதமி வாக்கு சேகரிப்பு