ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்களால் முடிவு செய்யப்பட்டு அதற்குண்டான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வந்தது.

கோயிலின் பூர்வாங்க பணிகள் நிறைவு பெற்று கடந்த 24ம் தேதி கோவில் அருகே யாக சாலைகள் அமைக்கப்பட்டு முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றது. இதில் விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை, நவகிரக ஹோமம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 25ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜை, விமான கலச ஸ்தாபனம் உள்ளிட்டவைகள் நடைபெற்று இரவு மூன்றாம் கால யாகபூஜைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை கோபூஜை மற்றும் நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் பூர்ணாகதி நடைபெற்று பஞ்சமுக தீபாதாரணை நடைபெற்றது.
பின்னர் யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வந்து கோவிலுக்கு மேலே உள்ள கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.
இந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


