19 மணி நேர அதிரடி சோதனை: வெளியேறிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்
19 மணி நேரத்திற்கு பிறகு திமுக முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் இருந்து வெளியே சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.
திருவண்ணாமலையில் முன்னாள் திமுக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை 7:30 மணிக்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதுமட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நெடுஞ்சாலையில் போடப்பட்ட சாலையில் அதிகளவு டெண்டர் முறைகேடு நடந்துள்ளது என்ற அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் இன்று திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் பகுதியில் உள்ள அருணை கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 19 மணி நேரத்திற்கு பிறகு முடிவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


