in

அதிநவீன ரயில் நிலையமாக திருவண்ணாமலை ரயில் நிலையம் மாற்றப்படும்

அதிநவீன ரயில் நிலையமாக திருவண்ணாமலை ரயில் நிலையம் மாற்றப்படும்

 

20 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுகின்ற ரயில் நிலையமாக திருவண்ணாமலை ரயில் நிலையம் திகழ்கிறது.

நகரம் படிக்கட்டுகள் மற்றும் லிப்ட் வசதி செய்து அதிநவீன ரயில் நிலையமாக திருவண்ணாமலை ரயில் நிலையம் மாற்றப்படும்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை பேட்டி.

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இன்று திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார்.

குறிப்பாக ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், நகரும் படிக்கட்டு மற்றும் லிப்ட் வசதிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனையும் பார்வையிட்ட ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து கீழ்நாத்தூர் பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே கழிவுநீர் செல்லும் பாதையையும் ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசுகையில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கடந்த ஏழு ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துகின்ற திட்டங்கள் மற்றும் முடிவுற்ற பணிகள் புதிதாக வரவுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதாகவும், இந்த ஆய்வின் அடிப்படையில் ஒவ்வொரு மாதம் பௌர்ணமி தினத்தின் பொழுது பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிவார்கள் என்றும், குறிப்பாக ரயிலில் அதிகப்படியான பக்தர்கள் வருவதால் ரயில் நிலத்தில் வசதிகள் மேம்படுத்தும் விதமாக ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

பத்துக்கும் மேற்பட்ட புதிய ரயில்கள், இரண்டு அதிவேக ரயில்கள், இரண்டு நீட்டிப்பு செய்யப்பட்ட ரயில்கள், பல்வேறு மாநிலங்களுக்கு வந்து செல்கின்ற ரயில்களில் தண்ணீர் நிரப்பும் வசதிகள், ரயிலை சுத்தம் செய்யும் வசதிகள், லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகள் ஆகியவை பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் பயன்படுத்த படிக்கட்டுகள் கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இந்த பணிகள் குறித்து தென்னக பொது மேலாளர் மற்றும் திருச்சி கோட்டை மேலாளர் ஆகியோரிடம் கலந்து ஆலோசனை செய்து பணிகள் முடிக்கப்பட்டு பல்வேறு வசதி வாய்ப்புகளை திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் ஏற்படுத்த ஆய்வு செய்ய உள்ளதாகவும், கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் என்.எஸ்.ஜி 5 என்ற தரத்தில் இருந்து தற்போது என்.எஸ்.ஜி 3 என்ற தரத்திற்கு திருவண்ணாமலை ரயில் நிலையம் வந்துள்ளதாகவும், தற்போது 20 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுகின்ற ரயில் நிலையமாக மாறி உள்ளதால் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் ஆய்வு செய்ததாக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை பேட்டி அளித்தார்.

What do you think?

தவெக கட்சியினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

இலவச நோட்டு புத்தகங்களை வழங்கிய தவெக நிர்வாகிகள்