நலத்திட்ட உதவிகளை வழங்கிய தவெக நிர்வாகிகள்
தமிழக முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தவெக நிர்வாகிகள்…
திருவண்ணாமலையில் இன்று தமிழக முதல்வர் விஜய் அவர்களின் 52வது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை தமிழக வெற்றி கழகம் தெற்கு மாவட்டம் சார்பில் தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் நல திட்ட உதவிகள் தவெகவினார் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தியாகி அண்ணாமலை நகர் பகுதியில் மாநகர மகளிர் அணி செயலாளர் துர்காதேவி ஏற்பாட்டில் 200க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அரிசி பருப்பு வகைகள் துணிமணிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


