in

இருவருடைய வாக்குவாதம் நாகை அபிராமி திருவாசலில் பரபரப்பு


Watch – YouTube Click

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் போது இந்தியா கூட்டணி கட்சியினர் கதிர் அரிவாள் சின்னத்திற்கு அவழியாக வாக்கு சேகரித்து சென்றதால் இருவருடைய வாக்குவாதம் நாகை அபிராமி திருவாசலில் பரபரப்பு

மக்களவைத் தேர்தல் 2024 தேர்தல் பிரச்சாரம் வரும் 17ஆம் தேதி முடிவுக்கு வரும் நிலையில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வருகின்றனர் இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து நாகப்பட்டினம் அபிராமி திருவாசலில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் நகரப் பகுதிகளில் இன்று காலை முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வை செல்வராஜ் கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்து கொண்டிருந்தார் இந்த நிலையில் அபிராமி திருவாசலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் போது இந்தியா கூட்டணி வேட்பாளர் வை செல்வராஜ் அவ்வழியாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்து கொண்டிருந்தார்

அப்போது காவல்துறையினர் அவரை தடுத்து மாற்று வழியில் செல்லுமாறு அறிவுறுத்தினர் தாங்கள் இவ்வழியாக பிரச்சாரம் மேற்கொள்வதற்கு அனுமதி பெற்றுள்ளோம் என தெரிவித்து முன்னேறிச் சென்றனர் இதனால் காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது வாக்குவாதம் முற்றிய நிலையில் காவல்துறையினரின் தடுப்பை மீறி இந்தியா கூட்டணி கட்சியினர் நாம் தமிழர் கட்சியின் பிரச்சார கூட்டத்தில் வழியாக சென்றனர்

அப்போது கதிர் அருவாள் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு முழக்கங்களை எழுப்பியவாறு சென்றதால் நாம் தமிழர் கட்சியினருக்கும் பதிலுக்கு மைக் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு முழக்கங்களை எழுப்பினர் இதனால் திமுக கூட்டணி கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட தள்ளு முள்ளாக மாறியது அருகில் இருந்த துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் இரு கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளு முல்லை சரி செய்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வண்ணம் அவ்விடத்தில் இருந்து இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர் வை செல்வராஜ் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கூட்டணி கட்சியினரையும் அனுப்பி வைத்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரி அரசு சார்பில் சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சித்திரை திருநாள் சிவலிங்கத்தின் மீது சூரியஒளி படும் அபூர்வ காட்சி