in

பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்


Watch – YouTube Click

பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்

 

புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி ஊசுடு, தொகுதிக்குட்பட்ட சேதராப்பட்டு, கரசூர், துத்திப்பட்டு தொண்டமாநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது, நமது ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.

அனைவரும் கல்வி பெரும் வகையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் அரசே கல்வி கட்டணத்தை செலுத்தி வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சிறப்பு கூறும் நிதியை முழுமையாக செயல்படுத்தி வருகிறோம்.

மேலும் நமது மாநிலம் சிறந்த வளர்ச்சியை பெறுவதற்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

பிராச்சாரத்தின் போது அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் ஜெ சரவணன் குமார் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பாஜக, என்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் சோதனைச் சாவடி அலுவலர்கள் பணிகள் குறித்து உரிய அறிவுரை வழங்கினார்

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சுங்கச்சாவடிகள் இருக்காது