in

புதுச்சேரி அரசு சார்பில் சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது


Watch – YouTube Click

சட்டமாமேதை அம்பேத்காரின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி அரசு சார்பில் சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழா  கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி சட்டப்பேரவை எதிரே உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில், துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா, காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் தேவ பொழிலன் உட்பட இண்டியா கூட்டணி கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து பாஜக சார்பில் மாநில தலைவர் செல்வகணபதி எம்பி, அமைச்சர் நமச்சிவாயம்,ராமலிங்கம் எம்எல்ஏ மற்றும் அதிமுக நிர்வாகிகள்,பாமக மாநில அமைப்பாளர் கணபதி உட்பட பல்வேறு பொதுநல அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்


Watch – YouTube Click

What do you think?

கொடைக்கானலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாமக வேட்பாளர்

இருவருடைய வாக்குவாதம் நாகை அபிராமி திருவாசலில் பரபரப்பு