in

பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் தேன்கூடு அச்சத்தில் நோயாளிகள்


Watch – YouTube Click

பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் தேன்கூடு அச்சத்தில் நோயாளிகள்

 

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் கூடு கட்டி உள்ள தேன் பூச்சிகளால் நோயாளிகள் அவதி அப்புறப்படுத்த கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் மைய பகுதியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது இந்த மருத்துவமனையில் 7 மாடியில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவ கட்டிடம் உள்ளது.

இங்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்று வரும் நிலையில் உயர்ந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் தேன்கூடு ஒன்று உள்ளது இதில் ஆயிரக்கணக்கான தேன் பூச்சிகள் வசித்து வருகின்றன.

இந்த தேன் பூச்சிகள் மருத்துவமனை வளாகத்தின் உள்ளே வருவதால் நோயாளிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர். பிறந்த குழந்தைகள் முதல் பச்சிளம்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் ஏராளமான குழந்தைகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில்.

இந்த தேன் பூச்சிகள் கொட்டினால் குழந்தைகள் உயிருக்கே ஆபத்தாக முடியும் நிலை உள்ளது.

உணவுப் பொருட்களில் தேன் பூச்சிகள் விழுந்து விடுவதால் நோயாளிகள் மற்றும் கூட இருக்கும் உறவினர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் விரைவாக தேன் கூட்டை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

மதுரை மத்திய சிறையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய சிறைவாசிகள் 100% தேர்ச்சி

வெளிவராத மகாத்மா காந்தியின் உண்மை சம்பவம்…வெப் சீரீஸ்…ஆக விரைவில்