in

மோகனூர் கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் சுவாசினி கன்னியா பூஜை

மோகனூர் கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் சுவாசினி கன்னியா பூஜை

 

நாமக்கல் மோகனூர் கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் சுவாசினி கன்னியா பூஜை ஏராளமானோர் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம் மோகனூர் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் இன்று சுவாசினி பூஜை விமர்சையாக நடைபெற்றது.

சௌந்தர்ய மீனாட்சி ஸ்வாமி புதனகுல கோத்திர வஸ்திர பெட்டகம் மோகனூர் கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் இருந்து மேல தாளத்துடன் காவிரி ஆற்றிற்கு சென்று பின்னர் பக்தர்கள் புனித நீராடி வஸ்திர பெட்டகம் பூஜை செய்யப்பட்டு பின்னர் முக்கிய வீதிகள் வழியாக வருகை புரிந்து கோவிலை அடைந்ததும் மூலவர் கன்னிகா பரமேஸ்வரி முன் தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

பின் அலங்கரிக்கப்பட்டஉற்சவ கன்னிகா பரமேஸ்வரி சொர்ண மங்கள கௌரி முன்இரு பெட்டகங்கள் வைக்கப்பட்டு சொர்ண கௌரியை ஆவாகணம் செய்து பலவித உபச்சார பூஜைகள் செய்யப்பட்டு பின் பின் தம்பதி சமேத தம்பதிகளால் சுவாசினி பூஜைகள் , கன்னியா பூஜைகள் நடைபெற்றது இந்த பூஜை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றன.

இதில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What do you think?

அண்ணாமலையார் கோவிலில் தேவிஸ்ரீ சாகர் மனைவியுடன் சாமி தரிசனம்

தாழையம்பட்டு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய ஆடி திருவிழா