மாம்பாக்கம் ஓம் ஸ்ரீ ஊமாரி அம்மன் கோவில் ஆடி ஜாத்திரை திருவிழா
உலக மக்கள் நன்மை வேண்டியும், மாதமும் மாறிப் பொழிந்து கிராமம் சேமிக்கவும் மாம்பாக்கம் ஓம் ஸ்ரீ ஊமாரி அம்மன் கோவில் ஆடி ஜாத்திரை திருவிழா வெகு விமர்சை ஐந்து நாட்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம்!……
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில்
உலக மக்கள் நன்மை வேண்டியும், மாதமும் மாறி பொழிந்து கிராமம் செழிக்கவும்
அருள்மிகு ஓம் ஸ்ரீ ஊமாரி அம்மன் திருக்கோவிலில் ஆடி ஜாத்திரை நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு (காப்பு திருவிழா) ஆடி மாதம் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.
இரண்டாம் நாள் ஊமாரி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நிறைவடைந்தது. பின்னர் செவ்வாய்க்கிழமை இன்னிசை நிகழ்வுகள் விமர்சையாக நடைபெற்றது.
இந்நிலையில் நான்காம் நாளான இன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஓம் ஸ்ரீ ஊமாரி அம்மன், ஸ்ரீ பொன்மாரி,மதுரை வீரன், துர்க்கை அம்மன், நவகிரக சுவாமிகள், நாகாத்தம்மனுக்கு அபிஷேகம் நிறைவு பெற்றது.
அதனைத் தொடர்நது பக்தர்கள் அம்மனுக்கு வேப்பஞ்சேலை அணிவித்து தங்களது பக்திப் பரவசத்தை வெளிப்படுத்தினர்.
மேலும் நேர்த்திக்கடன் வைத்திருந்த ஏராளமான பக்தர்கள் திருக்கோவில் வளாகத்தில் தேங்காய் உருட்டி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
பின்னர் பக்தர்கள் அம்மனுக்கு ஆடு வெட்டித் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி வழிபட்டனர்.

ஐந்து நாட்களும் நடைபெற்ற இந்த ஆடி ஜாத்திரை திருவிழாவில் மாம்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 7000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளைக் விழாக்குழுவினர் நாட்டாமைக்காரர் வெங்கடேசன் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் நாட்டார்மைக்காரர் வெங்கட்ராமன், துணைத் தலைவர் சரண்யா பிரகாஷ், வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்களுடன் இணைந்து சிறப்பாகச் செய்திருந்தனர்.


