in ,

அதிமுக எம்.பி. இன்பதுரை பேச்சுக்கு, அதிமுக மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலை ராஜா கண்டனம்

அதிமுக எம்.பி. இன்பதுரை பேச்சுக்கு, அதிமுக மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலை ராஜா கண்டனம்

தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டும் என அதிமுக எம்.பி இன்பதுரை கூறியதற்கு, மதுரை மாநகராட்சி எதிர்கட்சி அதிமுக மாமன்ற குழு தலைவர் சோலை ராஜா கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்காக கட்சி நடவடிக்கை எடுத்தாலும் சந்திக்க தயார் எனவும் அவர் சர்சை பேட்டி அளித்தார்.

மதுரை மாவட்ட அனைத்து விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் மதுரை எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. கபடி, அத்லெடிக்ஸ், ஹாக்கி, கூடைப்பந்து, கால்பந்து, ஜூடோ, ஜிம்னாஸ்டிக், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சோலை ராஜா, தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளையாட்டு சங்கங்களின் பொறுப்புகளில் இருந்து பதவி விலக வேண்டும் என அதிமுக எம்.பி இன்பதுரை சொல்வதற்கு மதுரை மாவட்ட அனைத்து விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இந்த கண்டனத்தை தெரிவிப்பதால் அதிமுக தலைமை சார்பில் கட்சி நடவடிக்கை எடுத்தால் அதை சந்திக்க தயார் எனவும் அவர் உறுதியாக கூறினார்

தமிழக வரலாற்றிலேயே விளையாட்டு வீரர் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருப்பது த.வெ.க ஆட்சியில் தான் என ஆதவ் அர்ஜுனாவுக்கு புகழாரம் சூட்டினார்.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு விளையாட்டு வீர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு மைதானங்களில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களிடம் வசூலிக்கப்படும் மாதாந்திர கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

What do you think?

புவனகிரி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில்‌ வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது

தமிழக முதல்வரின் 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற சிறப்பு ரத்ததான முகாம்