in

புவனகிரி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில்‌ வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது

புவனகிரி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில்‌ வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது

சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மனை பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மேள தாளங்கள் பம்பை ஒலிக்க ஆலயத்தை சுற்றி வலம் வந்து தாலாட்டு மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்தார் . பின்னர் பம்பை ஒலி முழங்க தாலாட்டு பாடலுடன் ஊஞ்சலில் அம்மனுக்கு தாலாட்டு உற்சவம் நடைபெற்றது.

தொடர்ந்து அம்மனுக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடைபெற்ற பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது . தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டு சென்றனர்.

What do you think?

மயிலம் ஸ்ரீ முருகன் கோயில் வைகாசி மாத கிருத்திகை தங்கமயில் வாகன உற்சவம்.

அதிமுக எம்.பி. இன்பதுரை பேச்சுக்கு, அதிமுக மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலை ராஜா கண்டனம்