மயிலம் ஸ்ரீ முருகன் கோயில் வைகாசி மாத கிருத்திகை தங்கமயில் வாகன உற்சவம்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திண்டிவனம் வட்டம் மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் வைகாசி மாத கிருத்திகை முன்னிட்டு உற்சவமூர்த்தி ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தங்க கவசத்தில் அலங்காரம் செய்யப்பட்டு மகாதிபாரதனை கும்பதீபம் நட்சத்திர தீபம் சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரம், மற்றும் பஞ்சமுக தீபாரதனை கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து கோயில் உட்பிரகாரம் வலம் வந்து தங்கமயில் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து தங்கமயில் வாகனத்தில் மலையை வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


