in

இரட்டணை ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய அக்னி வசந்த விழாவில் கர்ண மோட்சம்

இரட்டணை ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய அக்னி வசந்த விழாவில் கர்ண மோட்சம்

19ஆம் நாளை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ திரௌபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவர் திரௌபதியம்மனுக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து உற்சவர்கள் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ அர்ஜுன மகாராஜா ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ சுபத்திரை ஆகிய தெய்வங்கள் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தொடர்ந்து கற்பூரத்தை ஆரத்தி காண்பிக்கப்பட்டு கோயில் உட்பிரகாரம் வலம் வந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டவாகனத்தில் இரவு வீதி உலா நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.போர்க்களத்தில் கர்ணன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது, அவனது அள்ளிக்கொடுத்த ‘புண்ணியம்’ அவனைக் கவசமாய் நின்று காக்கிறது. இதனால் அவனது உயிரை அர்ஜுனனால் பறிக்க முடிவதில்லை. அப்போது கிருஷ்ணர் ஒரு அந்தணர் வடிவில் வந்து கர்ணனிடம் அவனது புண்ணியங்கள் அனைத்தையும் தானமாகக் கேட்டுப் பெற்றுக்கொள்கிறார்.

கர்ணன் தனது இறுதிப் புண்ணியத்தையும் கிருஷ்ணரின் கைகளில் குருதியோடு தானமாகத் தாரை வார்த்துக் கொடுத்தவுடன், கிருஷ்ணர் அவனுக்குத் தனது விஸ்வரூபக் காட்சியைக் காட்டி அருளுகிறார் அதுவே கர்ண மோட்சம் ஆகும்

What do you think?

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

தஞ்சை பெரியகோவில் மஹாவாராஹி அம்மன் சிறப்பு அபிஷேகம்