in ,

தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்


Watch – YouTube Click

விருதுநகரில் மாவட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் – 100 க்கும் மேற்பட்டோர் பங்கேர்ப்பு…

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் M.A.முருகன் தலைமையில், பொருளாளர் G. மாரிக்கனி முன்னிலையில்,

தொழிலாளர் தொழிற்சங்கங்களின் உரிமைகளை பறித்து நலவாரியங்களை கலைக்கும் ஒன்றிய அரசின் தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும், மாநில தொழிலாளர் சட்டங்களும் தொழில் வாரியாக நலவாரியங்களும் பாதுகாப்பட வேண்டும், கட்டுமான தொழிலாளர்களின் நலவாரியத்தை முத்தரப்பு நிறுவனம் என்பதை ஒடுக்கும் விதமாக அரசு செயல்படுவதை நிறுத்த வேண்டும்,

உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ3000, கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வுதியம் ரூ5000 வழங்க வேண்டும், மகப்பேறு கால உதவி ரூ30000 உம், திருமண உதவித்தொகை ரூ50000 உயர்த்தி வழங்கவேண்டும், இயற்கை மரணத்திற்கு ரூ20000 மும், தொழிலாளர் கல் விபத்தில் மரணமடைந்தால் அவர்களுக்கு ரூ50000 ம் விபத்துக்காப்பீடு உயர்த்தி வழங்க வேண்டும், டீசல், பெட்ரோல் விலை உயர்வால் உணவுப் பொருள்கள், சிமெண்ட், கம்பி மற்றும் கட்டுமான பொருள்களின் விலைவாசி உயர்வு மற்றும் அதற்கு ஜி.எஸ்.டி ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும்,

கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் 60 வயது முடிந்த தேதியிலிருந்து அவர்களுக்கு மாதம், மாதம் ஒய்வூதியம் கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும், வீடு இல்லாத கட்டிட தொழிலாளர்களுக்கு வீடு கட்ட வழங்கும் மானிய தொகை சதுர அடிக்கு ரூ 2000 விதம், 350 சதுர அடிக்கு ரூ 7 லட்சம் ஆக உயர்த்தி கொடுக்க வேண்டும்,

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்


Watch – YouTube Click

What do you think?

தண்ணீரின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யோகாசனம் செய்து உலக சாதனை

ஸ்டாலின் போல் மிமிக்ரி செய்த டிடிவி தினகரன், கருத்து கணிப்பு பெயரில் மக்களை ஏமாற்றும் திமுக