in

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்த பொதுமக்களுக்கு குளிர்ச்சியூட்டிய மழை மக்கள் மகிழ்ச்சி


Watch – YouTube Click

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்த பொதுமக்களுக்கு குளிர்ச்சியூட்டிய மழை மக்கள் மகிழ்ச்சி

 

திண்டுக்கல் நகரில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்த பொதுமக்களுக்கு குளிர்ச்சியூட்டிய மழையினால் மக்கள் மகிழ்ச்சி.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது நேற்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் துவங்கிய நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் வெயிலின் அளவு சுமார் 105 டிகிரி வரை இருந்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள திண்டுக்கல், மதுரை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மாலை 6:30 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் திண்டுக்கல்லில் காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை 4 மணி அளவில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய இடி மின்னலுடன் கனமழை பெய்யத் துவங்கியது.

சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக வெயிலின் தாக்கத்தில் சிக்கித் தவித்த பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. இன்று பெய்த இந்த கனமழையானது திண்டுக்கல் பேருந்து நிலையம், காட்டாஸ்பத்திரி, எம்.வி.எம் காலேஜ், செட்டிநாயக்கன்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், பொன்னகரம், தோமையார்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்தது இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் வழிப்பறி

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் விலகியது ஏன்?