in

தூய்மை காவலர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஊக்கத்தொகை


Watch – YouTube Click

தூய்மை காவலர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஊக்கத்தொகை

 

நாகை மாவட்டத்தில் பிளாஸ்டிக்கை ஒழித்து நெகிழி இல்லா மாவட்டமாக மாற்றிட தூய்மை காவலர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஊக்கத்தொகை பாப்பா கோயில் ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு;

நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பாகோவில் ஊராட்சியில் சுமார் 1500 குடும்பம்கள் வசித்து வருகின்றன. அவர்களிடம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறைகளின் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மை காவலர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றன.

அவ்வாறு சேகரிக்கும் குப்பைகளை ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகம் அருகே அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கில் மக்கும் குப்பை மக்கா குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை மறுசுழற்சி என்ற முறையில் உரமாக தயாரிக்கும் பணியிலும் மக்கா குப்பைகளான பிளாஸ்டிக் பொருட்களை நெகிழி இல்லா மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற புதிய முயற்சியில் செம்பருத்தி மகளிர் சுய உதவி குழு முலம் அமைக்கப்பட்டுள்ள நெகிழி மறுசுழற்சி மையத்தில் தரம் பிரித்த குப்பைகளை தூய்மை காவலர்கள் வழங்குகின்றன.

இந்த பணியினை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின் போது ஒரு கிலோ நெகிழி பத்து ரூபாய் என செம்பருத்தி குழு கொள்முதல் செய்த தொகையை ஊராட்சி நிர்வாகத்திற்கு ஐந்து ரூபாய் எனவும் மீதமுள்ள ஐந்து ரூபாயை தூய்மை காவலர்களுக்கு ஊக்கத் தொகையாக ஆட்சியர் நேரடியாக வழங்கி தூய்மை காவலர்களை ஊக்குவித்தார்.

ஒவ்வொரு மாதமும் அதிக ஊக்கத்தொகை பெறுவதன் மூலம் பிளாஸ்டிக்கை ஒழித்து விடலாம் நாகை நெகிழி இல்லா மாவட்டமாக மாறுவது உங்கள் கையில் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.


Watch – YouTube Click

What do you think?

மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்

உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் தொடக்கம்