in

அனைத்து அரசு பள்ளிகளிலும் CBSE பாடத்திட்டம்


Watch – YouTube Click

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்றுமுதல் சிபிஎஸ்சி பாடத்திட்டம் முழுமையாக அமல்…பள்ளிகள் இன்று திறப்பு..முதல் நாளே புத்தகங்கள் கொடுத்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி…அனைத்து அரசு பள்ளிகளிலும் CBSE பாடத்திட்டம் என்பதால் பெற்றோர் மகிழ்ச்சி…

இதுவரை தமிழ்நாடு கல்வி வாரியத்தின் கீழ் இருந்த புதுச்சேரி சிபிஎஸ்சிக்கு மாறியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 4 பிராந்தியங்களில் 10,12 ம் வகுப்பு தவிர்த்து அனைத்து வகுப்புகளும் 2023-24 கல்வியாண்டில் மாறின.
தற்போது 2024-25 ம் கல்வியாண்டில் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை சிபிஐசிக்கு மாறியுள்ளன.

இதனையொட்டி 2024-25 ம் கல்வியாண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று துவங்குகிறது.இதனால் புதுச்சேரி,காரைக்கால்,மாகி,ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் இன்று பள்ளிகள் துவங்கின.முதல் நாளே மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர் அவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்பு கொடுத்து வரவேற்பு கொடுத்தனர் அதேவேளையில் முதல் நாளிலே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது இதனால் மகிழ்ச்சி அடைந்து இருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்

பேட்டி…தாரா மெர்லின்…மாணவி..

புதுச்சேரியில் ஏராளமான அரசு பள்ளிகள் இருந்தாலும் பெற்றோர் அதிக அளவில் தனியார் பள்ளிகளில் நாடி சென்றனர். காரணம் அங்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் எடுக்கப்பட்டது. தற்பொழுது புதுச்சேரியில் அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளதால் மாணவர்களை அரசு பள்ளிக்கு ஆர்வத்துடன் பெற்றோர் கொண்டு வந்து சேர்த்தனர்.

பேட்டி…1.அன்புராஜ்..2.முரளி..3.மங்கையரசி..பெற்றோர்…

புதுச்சேரி கல்வித்துறை அடுத்த நிலைக்கு சென்றுள்ளது சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்காக தனியார் பள்ளிகளில் நாடிய பெற்றோர் தற்பொழுது புதுச்சேரி அரசு பள்ளிகளில் நோக்கி வருகிறார்கள், முதல் நாளை மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவிக்கின்றன தெரிவிக்கின்றார்

பேட்டி…சிவக்குமார்..தலைமை ஆசிரியர்..எக்கோலான்ஸ் அரசு பள்ளி…

புதுச்சேரியில் இன்று துவங்கியுள்ள பள்ளிகள் ஒரு மாத காலம் செயல்படும்.
மே 1ம் தேதி முதல் ஜூன் 2 ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூன் 3 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வி துறை அறிவித்துள்ளது..


Watch – YouTube Click

What do you think?

கூட்டணிக்கு கூப்பிடும்போது மோடிக்கு கெட் அவுட்

திமுக எம்பி கனிமொழி கருணாநிதியின் காரை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர்