தேய்பிறை சஷ்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை
தேனியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் திருக்கோயிலில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை.
தேனி அருகே சமதர்மபுரத்தில் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயிலில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தனி சன்னதியில் அருள் பாலிக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமணியருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பலவித திரவியம் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கையில் வேலுடன் கிரீடம் அணிவித்து வண்ணமலர் மாலைகளால் சிறப்பு அலங்காரத்தில் சிவசுப்பிரமணியர் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

தொடர்ந்து சிவசுப்பிரமணியருக்கு தூபம் காட்டப்பட்டு பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேய்பிறை சஷ்டி தினத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜையை கண்டு தரிசித்துச் சென்றனர்.

