in

தேசிய நெடுஞ்சாலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் வைக்கப்பட்டு காட்சி பொருளாக உள்ள மின் கம்பங்கள்\

தேசிய நெடுஞ்சாலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் வைக்கப்பட்டு காட்சி பொருளாக உள்ள மின் கம்பங்கள்\

திருவண்ணாமலை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் வைக்கப்பட்டு மின் கம்பங்கள் கடந்த 20 நாட்களாக எறியாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலையில் புதியதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையம் அருகில் முக்கிய பிரதான சாலையான திருவண்ணாமலை டு சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின் கம்பங்களில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு மின்விளக்கு எரியவில்லை.

குறிப்பாக நாவக்கரை, கீழ்நாச்சிப்பட்டு, சகாய நகர் உள்ளிட்ட பல்வேறு தெருக்கல் இந்த நெடுஞ்சாலையில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கம்பங்களில் மின்விளக்கு எரியாததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக நெடுஞ்சாலையில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகமும் அமைந்துள்ளது. அலுவலகத்திற்கு அருகிலே இது போன்ற மின்விளக்குகளை எறியாததால் அதை கண்டுகொள்ளாமல் இருக்கும் நெடுஞ்சாலை துறை மற்ற சாலைகளில் மின்விளக்கு ஏரியாதது சரி செய்வார்கள் என்று பொதுமக்களிடையே கேள்விக்குறி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் இறுதியில் வைக்கப்பட்ட விண்கம்பங்கள் காட்சி பொருளாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அனுதினமும் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் மின் விளக்குகள் எறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

What do you think?

ஆய்வு செய்ய வந்த இடத்தில் செல்ஃபி, ரீல்ஸ் எடுப்பதில் ஆர்வம் காட்டிய மீன்வளத்துறை அமைச்சர்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடுவில் உலக தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி