in ,

T20 வீரர்களுக்கு ரிக்கி பாண்டிங் ஆலோசனை


Watch – YouTube Click

T20 வீரர்களுக்கு ரிக்கி பாண்டிங் ஆலோசனை

தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார்.

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங், டி20 கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சியை பற்றி ஆராய்ந்து சில விஷயங்களை சமீபத்தில் ஈஎஸ்பிஎன்னுக்கு (ESPN) அளித்த பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். இதை பற்றி பேசிய அவர்,”நாங்கள் எல்லாம் அந்த காலத்தில் முதலில் களத்தில் செட்டில் ஆவதை பற்றி தான் சிந்திப்போம் அதன் பிறகு தான் களத்தில் ஆக்ரோஷம் காட்ட தொடங்குவோம்.

ஆனால், இப்பொது முதல் ஆரம்பத்திலிருந்தே உறுதியான ஷாட்களை விளையாடுங்கள் என்று பயிற்சியாளர்கள் அறிவிருத்துவது போல் உள்ளது. இந்த மாற்றத்தை நான் நினைத்து கூட பார்க்கவில்லை, இது தான் டி20 கிரிக்கெட் முதல் 4 அல்லது 5 பந்துகள் செட்டில் ஆக எடுத்து கொண்டு அடுத்து விளையாடும் பந்திலிருந்து அடித்து விளையாடுங்கள்.

டி20யில் 300 ரன்கள் அடிப்பார்கள் என்பது சாத்தியமில்லாத ஒன்று என நினைத்திருந்தேன் ஆனால் அது இப்போது நடக்குமென்று தோன்றுகிறது. மேலும், ஒரு முறை நானும், மேத்யூ ஹைடனும் இதை பற்றி பேசி கொண்டிருக்கையில் அவர் என்னிடம், ‘நண்பா .. டி20 தான் எதிர்காலம் என்று கூறினார்.

அதற்கு நான் “இல்லை தோழரே இது எதிர்காலம் இல்லை என்று கூறி இருக்கிறேன். இப்பொது எனக்கு அவர் கூறியது தான் நினைவில் வருகிறது”, என்று ஈஎஸ்பிஎன்னுக்கு (ESPN) அளித்த பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். மேலும், அவர் நடைபெறும் ஒவ்வொரு டி20 போட்டியிலும் வீரர்களும், அந்த அணிகளும் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்று ஆராய்ந்து வருவதாகவும் கூறி இருந்தார்.


Watch – YouTube Click

What do you think?

தடுமாற்றத்தில் மும்பை அணி

லண்டன் மேயர் தேர்தலில் 40.5% வாக்குப் பதிவு