in

கந்து வட்டி கொடுமை


Watch – YouTube Click

கந்து வட்டி கொடுமையால் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சலூன் கடைக்காரர்…. சாலையின் நின்று கதறிய மனைவி மற்றும் மகன்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட ஆண்டாங்கரை தெற்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் வயது 47. இவரது மனைவி பானுமதி.இவருக்கு விஷ்வா என்கிற மகனும் பாக்யலட்சுமி என்கிற மகளும் உள்ளனர்.பாஸ்கரன் திருவாரூரில் இருந்து நாகை செல்லும் புறவழிச் சாலையில் பாஸ் பியூட்டி பார்லர் என்கிற சலூன் கடை நடத்தி வருகிறார்.இவருக்கு உதவியாக அவரது மகனும் அந்தக் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மதியம் வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வந்த பாஸ்கரன் கூடூர் பகுதியில் பூச்சிகொல்லி மருந்து குடித்து விட்டு மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.இதனை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாஸ்கரனை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது மொபைல் பின்புறம் விஷம் அருந்துவதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் அவரது மகனுக்கு கிடைத்தது.

இந்த கடிதத்தில் தான் திருவாரூர் ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான கோவிந்தராஜன் மற்றும் அவரது மகன் இனியன் ஆகியோரிடம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கியதாகவும் இதுவரை 18 லட்சம் ரூபாய் வட்டி கட்டிய நிலையில் கந்து வட்டி மீட்டர் எனக் கூறி மேற்கொண்டு 12 லட்ச ரூபாய் கேட்டு தொடர்ந்து என்னை மிரட்டி வந்ததுடன் எனது மகனை மாலைக்குள் தூக்கி விடுவேன் என்று மிரட்டியதால் என்னால் தொழில் செய்யவே முடியவில்லை எனவே தற்கொலை செய்து கொள்கிறேன் என்றும் எனது சாவிற்கு காரணம் கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன் தான் என்றும் குறிப்பிட்டு அவர்களது தொலைபேசி எண்களையும் அந்த கடிதத்தில் அவர் எழுதி வைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று மாலை பாஸ்கரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து பாஸ்கரனின் மனைவி பானுமதி திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பாஸ்கரன் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். இந்த நிலையில் தாலுகா காவல் நிலையத்தில் காத்திருந்த பாஸ்கரனின் மனைவி மற்றும் மகன் கதறி அழுதது காண்போர் நெஞ்சை கனக்க வைத்தது.

இதுகுறித்து உயிரிழந்த பாஸ்கரனின் மகன் விஷ்வா கூறுகையில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு 6 லட்சம் ரூபாய் கடன் பெற்றதற்கு வட்டியாக 18 லட்சம் ரூபாய் கொடுத்த நிலையில் மேற்கொண்டு 12 லட்ச ரூபாய் கேட்டு தொடர்ச்சியாக கடைக்கு வந்து மிரட்டியதாகவும் இதனால் தனது தந்தை தூக்கமில்லாமல் தவித்து வந்ததாகவும் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில் ஜூன் மாதத்தில் 6 லட்சம் ரூபாய் கொடுப்பதாக நாங்கள் ஒப்புக்கொண்ட போதும் தொடர்ந்து கோவிந்தராஜனும் அவரது மகனும் தொடர்ந்து மிரட்டிய நிலையில் தற்போது தந்தை பூச்சி மருந்து குடித்து உயிர் இழந்ததாகவும் வேதனை தெரிவித்தார்.மேலும் இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார்.


Watch – YouTube Click

What do you think?

மது போதையில் விபரீத முடிவு

காவலர்களுக்கு தலைக் கவசம் அணிவித்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு