in

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு அரசியல் தான் காரணம் திருச்சியில் வைகோ பேட்டி


Watch – YouTube Click

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு அரசியல் தான் காரணம். எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவே இதுபோன்ற கைது நடவடிக்கைகளில் பாஜக அரசு ஈடுபடுகிறது திருச்சியில் வைகோ பேட்டி

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி:
ஜனநாயகத்துக்கும் ஏகாதிபத்தியத்திற்குமான இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரே நாடு ஒரே இனம் ஒரே மொழி ஒரே மதம் என்ற கோஷத்தை வைக்கும் இந்துத்துவா சக்திகள், சனாதன சக்திகளின் கை ஓங்கி விடக்கூடாது என்பதில் இண்டியா கூட்டணி வலுவாக இருக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் முன் மாதிரியாக ஆட்சி நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலின் இன்று தேர்தல் பிரச்சாரத்தை துவங்குகிறார்.

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து டெல்லி முதல்வரை கைது செய்து உள்ளனர். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் அவர்களது இந்துத்துவா நோக்கத்தை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர். அதன் அடிப்படையில் காஷ்மீரை துண்டு துண்டாக்கினர். குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமையை மறுக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்துள்ளனர். ஜன நாயகத்துக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் சமதர்மத்துக்கும் நேர் விரோதமான கூட்டம் பல இடங்களில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. பெரியார் பூமியான தமிழகத்தில் அடியெடுத்து வைக்க முயற்சிக கின்றனர் அதை தடுக்க திமுக உறுதியாக நின்று போராடிக் கொண்டிருக்கிறது.

ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவாலான இந்த தேர்தலில் திமுக தலைமை யிலான இந்த கூட்டணி வெற்றி பெறும். அரசியல் காரணமாக, எதிர்க்கட்சிகளை மிரட்டும் வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து உள்ளனர். பா.ஜ. அரசு எதையும் ஒத்துக் கொள்வதில்லை செய்வதை எல்லாம் செய்து விட்டு எங்களுக்கு சம்பந்தமில்லை என்று கூறி விடுவர். திருச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளர் குறை வைகோ ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று வழிபட்டதையும் ஈவெரா சிலைக்கு மாலை அணிவித்ததையும் நன்றாகவே பார்க்கிறேன். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி துவக்கினாலும், கட்சியினர் 100% அவர்தான் வரவேண்டும் என்று விரும்பியதால் தான் அவன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்


Watch – YouTube Click

What do you think?

நான் வில்லத்தனமான நடிகை … யாரும் என்னை நெருங்கமாட்றாங்க.. ஷில்பா மஞ்சுநாத்

இன்று அமைச்சராக பதவியேற்கிறார் பொன்முடி