in

புதுச்சேரி முதலமைச்சர் பிரச்சாரத்தில் பெண்கள் குறிக்கிட்டு பேசியதால் சலசலப்பு


Watch – YouTube Click

புதுச்சேரி முதலமைச்சர் பிரச்சாரத்தில் பெண்கள் குறிக்கிட்டு பேசியதால் சலசலப்பு.

ரேஷன் அரிசிக்கு பதிலாக பணம் போடுவதால் ஆண்கள் குடிப்பதற்கு தான் பயன்படுத்துகிறார்கள் என முதலமைச்சரிடம் குற்றச்சாட்டு. பெண்கள் தங்கள் கட்டுப்பாட்டில் ஆண்களை வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை. இந்த பணம் மட்டும் தான் எடுத்துக் கொண்டு குடிப்பதற்கு போகின்றனரா எனக் பெண்களிடம் கேள்வி..?

இந்தியா கூட்டணி 100 இடங்களுக்கு மேல் பெறுவது சந்தேகம்…400 இடங்களை தாண்டி பாஜக கூட்டணி வெற்றி பெறும்…பிரதமராக மீண்டும் மோடி அமர்வார்…பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு..

புதுச்சேரியில் பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்த நிலையில் இன்று அரியாங்குப்பம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தில் வேட்பாளர் நமச்சிவாயம், அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் உள்ளீட்ட கட்சி நிர்வாகிகள் கூட்டணி தலைவர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்…

அப்பொழுது அரியாங்குப்பம் கடை வீதிகளில் நின்று பேசிய முதலமைச்சர் ரங்கசாமி..தற்போது காங்கிரஸ் எம்பியாக உள்ளவரால் புதுச்சேரிக்கு ஏதாவது செய்தாரா…?

ஏதாவது புதிய திட்டத்தை கொண்டு வந்தாரா …?ஏதாவது பேச முடிந்ததா…?என கேள்விகளைக் கேட்க கீழே இருந்த பொதுமக்கள் இல்லை இல்லை என கோஷம் எழுப்பினார்கள்.இதுவரை எதுவுமே செய்யாத காங்கிரசார் பாராளுமன்றம் சென்றால் அதே நிலை தான் எதுவும் செய்ய முடியாது. இந்தியா கூட்டணி 100 இடங்களுக்கு மேல் பெறுவது சந்தேகம் தான்.400 இடங்களை தாண்டி பாஜக கூட்டணி வெற்றி பெறும்.பிரதமராக மீண்டும் மோடி அமர்வார்.ஆதலால் புதுச்சேரியில் பாஜகவுக்கு வாக்களித்து பொதுமக்கள் தங்கள் வாக்கை பயனுள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டும் என ரங்கசாமி கேட்டு கொண்டார்..

அப்பொழுது குறுக்கிட்டு பேசிய பெண்கள் ரேஷன் கடையை திறக்க வேண்டும், இலவச மனை பட்டா வழங்க வேண்டும், படித்த தங்கள் பிள்ளைகளுக்கு வேலை வழங்க வேண்டும் என முதலமைச்சர் பேசி கொண்டு இருக்கும் பொழுது பெண்கள் குறுக்கிட்டு பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது….

ரேஷன் கடையில் அரிசி வழங்க வேண்டும் நீங்கள் தருகின்ற பணம் எங்கள் வீட்டு ஆண்கள் குடிப்பதற்கு தான் செலவாகிறது என்று கூறினர். அப்பொழுது முதலமைச்சர் இந்தப் பணத்தை எடுத்து மட்டும்தான் குடிப்பதற்கு செல்கின்றன மற்ற பணத்தை எடுத்துக் கொண்டு குடிப்பதற்கு செல்ல வில்லையா என கேள்வி எழுப்பினார்…தங்களுடைய கணவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள் குடிப்பதற்கு செல்லாமல் வைத்துக் கொள்ளுங்கள் என கூறினார்…அதனைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் இருக்கும் வீடு இல்லாத 250 நபர்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் இலவச மனை பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சலசலப்பாக காணப்பட்டது…


Watch – YouTube Click

What do you think?

வாக்கு சாவடி மையங்களை ஆய்வு செய்த ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுரை

வேகமாகச் சுழலும் பூமி கடிகாரங்களில் 1 விநாடியைக் கழிக்க விஞ்ஞானிகள் திட்டம்