in

 ஸ்ரீ முனீஸ்வரன்,ஸ்ரீ வீரன்,ஸ்ரீ கன்னியம்மன் ஆலய 12 ஆம் ஆண்டு பால்குட திருவிழா

 ஸ்ரீ முனீஸ்வரன்,ஸ்ரீ வீரன்,ஸ்ரீ கன்னியம்மன் ஆலய 12 ஆம் ஆண்டு பால்குட திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை ஊராட்சி சாவடி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ முனீஸ்வரன்,ஸ்ரீ வீரன்,ஸ்ரீ கன்னியம்மன் ஆலய 12 ஆம் ஆண்டு பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக ஆலயத்தில் கணபதி ஹோமம் வேத பாராயணம் நடைபெற்றது.

பின்னர் சக்தி கரகம் சிறப்பு பூஜைகளுடன் புறப்பாடு செய்யப்பட்டு காப்பு கட்டி மஞ்சள் உடை உடுத்திய 100 ற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்து முக்கிய விதிகள் வழியாக வான வேடிக்கை மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வழிநெடுகிலும் பொதுமக்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர் பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு முனீஸ்வரன் வீரன் காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.பெண்கள் மாவிளக்கு தீபமிட்டு வழிபாடு செய்தனர் இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனர்.

What do you think?

கோட்டக்குப்பத்தில் சர்ச்சைக்குரிய சுடுகாட்டை இடமாற்றம் செய்ய வேண்டும்

கும்பகோணம் தாராசுரத்தில் குடிநீர் கேட்டு அதிமுக காலி குடத்துடன் முற்றுகை போராட்டம்