in

கோட்டக்குப்பத்தில் சர்ச்சைக்குரிய சுடுகாட்டை இடமாற்றம் செய்ய வேண்டும்

கோட்டக்குப்பத்தில் சர்ச்சைக்குரிய சுடுகாட்டை இடமாற்றம் செய்ய வேண்டும்

 

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் சர்ச்சைக்குரிய சுடுகாட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகேயுள்ள நடுக்குப்பத்தைச் சேர்ந்த தலித் மக்களுக்கும் மீனவ மக்களுக்கும் இடையே சுடுகாடு பிரச்னை இருந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கடந்த 7ஆம் தேதி இப் பகுதியில் ஆய்வு செய்தார்.

இதையொட்டி ஒரு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மீனவர்கள் கடும்எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மீனவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று மாலை காலாப்பட்டு பகுதியில் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் சர்ச்சைக்குரிய சுடுகாட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டதாகவும், இது ஒட்டுமொத்த மீனவ சமுதாயத்தினரின் கோரிக்கை என்றும் மீனவர் சங்கத்தின் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

முன்னதாக அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் காளியம்மாள் நடுக்குப்பம் பகுதியில் மீனவ சமுதாய மக்களைச் சந்தித்து, இப் பிரச்னை குறித்துக் கேட்டறிந்தார்.

இதனிடையே சுடுகாடு பிரச்னை குறித்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு,மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆகியோர் தலைமையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

What do you think?

சேத்தியாத்தோப்பில் எறும்பு மருந்தை உட்கொண்ட இளைஞர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் மெடிக்கலில் வைத்தியம் பார்த்ததால் இளைஞர் உயிரிழப்பு

 ஸ்ரீ முனீஸ்வரன்,ஸ்ரீ வீரன்,ஸ்ரீ கன்னியம்மன் ஆலய 12 ஆம் ஆண்டு பால்குட திருவிழா