in ,

இந்திய நாடாளுமன்ற தேர்தல் – 2024 முக்கிய அம்சங்கள் | Indian Parliamentary Elections-2024


Watch – YouTube Click

இந்திய நாடாளுமன்ற தேர்தல் -2024 குறித்து முக்கிய அம்சங்கள் பின்வருமாறு

நாடாளுமன்ற தேர்தலில் 96.80 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.

49.70 கோடி ஆண் வாக்காளர்கள் உள்ளனர்.

47.10 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

1000 ஆண் வாக்காளர்களுக்கு, 947 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

55 லட்சம் வாக்குபதிவு மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

10.50 லட்சம் வாக்கு சாவடி மையங்கள் உள்ளன.

குற்றப் பின்னணி குறித்த வேட்பாளர்கள் 3 முறை செய்தித்தாள்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

வேட்பாளர்கள் குறித்து விபரங்களை அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

பதட்டமாக வாக்குசாவடிகளில் வெப் காஸ்டிக் செய்யப்படும்.

எல்லைகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்.
புகார் அளிக்க மக்கள் செயலிகளை பயன்படுத்தலாம்.

சட்டவிரோத ஆன்லைன் பணப் பரிமாற்றம் குறித்து தீவிர கண்காணிப்பு செய்யப்படும்.

சூரிய மறைவிற்கு பிறகு, வங்கி ஏ.டி.எம் வாகனங்களில் பண நடமாட்டம் கூடாது.

சமுக வலைத்தளங்களில் உண்மையாக தகவல்களை விமர்சனம் செய்யலாம். தவறான தகவல்களை விமர்சனம் செய்ய கூடாது. இதனை கண்காணிக்க குழு அமைக்கப்படும்.

வாக்கு சாவடிகளில் துணை ராணுவத்தினர் கண்காணிப்பு.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று (மார்ச் 16) முதல் தொடங்குகிறது.

தேர்தலில் வெறுப்பு பிரச்சாரம் இருக்க கூடாது.

தனி நபர் வாழ்க்கை குறித்து விமர்சனம் செய்ய கூடாது.

சாதி,மத அடிப்படையான பிரச்சாரம் செய்ய கூடாது.

பணப்பட்டுவாடா, பரிசு பொருள்கள் வினியோகம் கட்டுப்படுத்தபடும்.

போலியான தகவல், செய்திகளை பரப்பினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நட்சத்திர பேச்சாளர்கள் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்

அரசியல் கட்சிகளின் வங்கி கணக்குகள் டிஜிட்டல் மாயமாக்கப்பட்டுள்ளன. இதை கண்காணித்து வருகிறோம்.

2,100 தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமனம்.

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள், மாணவர்களை பயன்படுத்த தடை விதிப்பு.


Watch – YouTube Click

What do you think?

அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு

நடிகர் ரஜினிகாந்த் திரை துறையில் மட்டும் சூப்பர் ஸ்டார் இல்லை…பலர் வாழ்கையில் ஒளி ஏற்றி ஜொலிக்கும் ஸ்டார்