in

பழனியில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

பழனியில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

 

இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத அளவு மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி உறுதியாகும் – பழனியில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.
​
முந்தைய ஆட்சியில் பணிகள் முடங்கிக் கிடந்ததாகவும், தற்போது போர்க்கால அடிப்படையில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் பேட்டி.

வாக்கு எண்ணிக்கைக்கு முதல்நாள் செண்டிமெண்ட்; பொதுத்தேர்தலை தொடர்ந்து இடைத்தேர்தலுக்கும் பழனி வந்த அமைச்சர் செங்கோட்டையன்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று மாலை சாமி தரிசனம் செய்து சிறப்புச் சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டார்.

கடந்த 2026 மே மாத பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாளும் இதேபோன்று பழனி மலைக்கோயிலில் சாயரட்சை பூஜையில் கலந்து கொண்ட நிலையில், தற்போது தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாளான இன்றும் அதே சென்டிமென்டோடு பழனிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

பழனி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பிறகு அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக முதலமைச்சர் ஒரு நல்லாட்சி நடத்துகிறார் என்பதற்கு ஒரு அத்தாட்சியாக தாராபுரம், மதுராந்தகம் இரண்டும் அமையும்.

​தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு ஒரு வெற்றி அடைவது உறுதி. அதிலே எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

​வித்தியாசத்தைப் பொறுத்தவரையிலும் எல்லோரும் வியக்கத்தக்க அளவிற்கு வாக்குகள் வித்தியாசம் அடையும்.

​ஆகவே இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையிலும் ஒரு மாற்றம் தமிழகத்திலே தமிழக வெற்றிக் கழகத்தினுடைய தலைவர், அவர்களுடைய ஆட்சியின் ஒரு அங்கீகாரம் மட்டுமல்ல, அவர் நடத்துகின்ற பல்வேறு துறையின் சாதனை சரித்திரத்தைப் படைக்கின்ற நிகழ்வாக இது அமையும்.

சென்னை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கருத்து குறித்த கேள்விக்கு – திமுக ஆட்சி காலத்தில் ஏன் மழைநீர் அவ்வளவு தேங்கி இருந்தது என்பதை ஸ்டாலின் தான் பதில் சொல்ல வேண்டும்.
​எந்தப் பணியும் முழுமையாக முடிக்கப்படவில்லை. இந்த ஐந்து மாத காலத்தில்தான், விரைந்து இந்த நான்கு மாத காலத்தில்தான் இந்தப் பணிகள் விரைந்து நடைபெறுகிறது.

​சென்னை மாநகரத்திலே சார்ந்து இருக்கிற மக்களுக்கு அதுதான் தெரியும்.

இடைத்தேர்தல் முடிவிற்கு பின் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் தவெகவிற்கு வருவது குறித்த கேள்விகு பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.

What do you think?

வெற்றிபடிக்கட்டு கருத்தரங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

யூரியா உர கழிவு நீரை குடித்த ஆடுகள்