in

வெற்றிபடிக்கட்டு கருத்தரங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெற்றிபடிக்கட்டு கருத்தரங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

காட்டுமன்னார்கோவிலில் மாணவ மாணவிகள் வெற்றி படிக்கட்டு கருத்தரங்கு நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு கதறி அழுத மாணவ, மாணவிகள்!

ஆறுதல் கூறி தேற்றிய ஆசிரியர்கள்; 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 10 வகுப்பு 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான வெற்றிபடிக்கட்டு கருத்தரங்கு
விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர் இளைய அப்துல் கலாம் எனும் ஜெகன் கலந்து கொண்டு பத்தாம் வகுப்பு பணிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு குறித்து விளக்கி பேசினார்.

மாணவர்களின் படிப்பு குறித்தும் அதனால் வாழ்க்கையில் பெற்றோரின் தியாகம், மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு குறித்தும் அவர் உருக்கமாக பேசினார்.

ர்ச்சிவசப்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மாணவர்களின் இந்த உணர்ச்சிகரமான நிலை அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இதையடுத்து தனியார் பள்ளியின் தாளாளர் குமாரராஜா, மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை மேடைக்கு அழைத்து, அவர்களின் கண்களைத் துடைத்து ஆறுதல் கூறினார்.

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
மேலும் மாணவர்கள் உணர்ச்சியுடன் பெற்றோர்களை கட்டி பிடித்து தேம்பி அழுதனர்.

What do you think?

காசி விஸ்வநாதர் திருக்கோவில் பிரதோஷ சிறப்பு பூஜை

பழனியில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி