ஸ்ரீ ஐய்யனார் ஆலய மஹா கும்பாபிஷேகம் விழா
அருள்மிகு ஸ்ரீ பூரண புஷ்கலா சமேத ஸ்ரீ ஐய்யனார் ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அடுத்த இந்தளூர் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பூரண புஷ்கலா சமேத ஸ்ரீ ஐய்யனார் ஆலயத்தில் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கோயிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த யாக குண்டத்தில் கணபதி பூஜை உடன் தொடர்ந்து 2 நாட்கள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
கும்பாபிஷேக விழா அன்று காலை வேத மந்திரங்கள் முழங்க கங்கா, யமுனா, கோதாவரி, நர்மதா, மற்றும் ராமேஸ்வரம், உள்ளிட்ட கங்கை நதியிலிருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு, இன்று காலை மேள தாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன், கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி தீப ஆராதனை காண்பித்து மஹா கும்பாபிஷேகம் கிராம பெரியோர்களின் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.

ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஐய்யனார் சுவாமி அருளை பெற்றனர்.
மேலும், விழாவில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


